வேப்பேரி :கொரோனா ஊரடங்கில், மாணவர்களுக்கு 'ஆன்லைனில்' பாடம் எடுத்து, அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திய, 350 பள்ளி முதல்வர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் மற்றும் ஸ்கூல் வாய்ஸ் இணைந்து, சென்னை வேப்பேரியில், இதற்கான விழாவை நடத்தின. தமிழகம் முழுதும் உள்ள மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, சோமு ஆகியோர் பங்கேற்று, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.இந்த விழாவில், ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் பொது செயலர் ஆசிர் பாண்டியன், துணை தலைவர் ரவிக்குமார் டேவிட் மற்றும் தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், தலைவர் மார்டின் கென்னடி மற்றும் ஜான் ஆரோக்கிய பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், கொரோனா காலங்களில் மாணவர்களின் கற்றல் இழப்பு தொடர்பான தேசிய அளவிலான ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், 'தினமலர் - பட்டம்' பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் கவுரவிக்கப்பட்டார். அவர் பேசும் போது, ''மாணவர்களின் எதிர்காலத்திற்கு, 'தினமலர்' பட்டம் உறுதுணையாக இருக்கும்,'' என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE