நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை:கணக்கெடுப்பு பணி துவக்கம்

Added : மே 14, 2022
Advertisement
அவிநாசி:அவிநாசி நெடுஞ்சாலை எல்லையில், சாலை மேம்பாடு சார்ந்த திட்டம் தயாரிக்க, வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது.மாநில நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில், வாகனங்களின் போக்குவரத்து தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும்.தினசரி பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, வாகன அடர்த்தி அடிப்படையில், சாலைகளை அகலப்படுத்துவது, வேகத்தடை அமைப்பது, சிறு
நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை:கணக்கெடுப்பு பணி துவக்கம்

அவிநாசி:அவிநாசி நெடுஞ்சாலை எல்லையில், சாலை மேம்பாடு சார்ந்த திட்டம் தயாரிக்க, வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது.மாநில நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில், வாகனங்களின் போக்குவரத்து தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும்.தினசரி பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, வாகன அடர்த்தி அடிப்படையில், சாலைகளை அகலப்படுத்துவது, வேகத்தடை அமைப்பது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட திட்டமிடல் மேற்கொள்ளப்படும்.
மேலும், சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எடைக்கேற்ப சாலையின் தடிமன், ஸ்திரத்தன்மையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். கூடுதலாக ஸ்திரத்தன்மை தேவைப்படும் பட்சத்தில், அதற்கான திட்டமிடல் வகுக்கப்படும்.அதன்படி, கடந்த, 2017ல், மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இந்தாண்டு, இப்பணி துவங்கியுள்ளது.
அவிநாசி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டு, 248 கி.மீ., சாலை உள்ளது. பல்லடம் - - அவிநாசி -- புளியம்பட்டி சாலை, சேவூர் - - ஈரோடு - சத்தி சாலை, அவிநாசி -- குன்னத்துார் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலை பராமரிப்பில், சாலைகளில், ஒன்பது இடங்களில், வாகன கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.ஏழு நாள் நடக்கும் இப்பணியில் சாலையில் பயணிக்கும் மாட்டு வண்டி, தள்ளுவண்டி முதற்கொண்டு, டூ வீலர், கார், ஜீப், வேன், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகன போக்கு வரத்து குறித்தும் கணக்கெடுக்கப்பட உள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X