நீண்ட இடைவெளிக்கு பின், 'சர்பிங்' எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டு முகாம், கோவளம் கடற்கரையில் நடைபெற உள்ளது.
உடலுக்கும், மனதிற்கும் உறுதியும், உற்சாகமும் தரும் சர்பிங் விளையாட்டு, உலகம் முழுதும் உள்ள கடற்கரை பகுதியில் விளையாடப்படுகிறது. சென்னையில், கோவளம் பகுதியில், பல தனியார் அமைப்புகள் இந்த சர்பிங் விளையாட்டை கற்றுத் தருகின்றன.கோவளத்தில் முதன் முதலாக சர்பிங் விளையாட்டைக் அறிமுகப்படுத்தியவர் மூர்த்தி. இதில் நீண்ட கால அனுபவத்துடன், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியவர் இவர். 'சர்ப் கிளப்' உருவாக்கி, இந்த விளையாட்டை கற்றுத்தருகிறார், இவர். இந்த விளையாட்டை, ௮ வயதிற்கு மேற்பட்டோர் கற்றுக் கொள்ளலாம். புதிதாக கற்றுக் கொள்வோருக்கு வயது ஒரு பொருட்டல்ல. இதை கற்றுக் கொண்ட பின், 'சர்ப் போர்டு' வாங்கிக் கொண்டு, வாழ்க்கை முழுதும் கடற்கரை பகுதியில் இதை விளையாடி மகிழலாம்.இந்த விளையாட்டு, இயற்கையோடு இணைந்தது. எனவே, எவ்வளவு நேரம் விளையாடினாலும் அலுக்காது. அவரவர் ஆர்வம், உடல் தகுதியைப் பொறுத்து, கற்றுக் கொள்ளும் காலம் வித்தியாசப்படலாம்.இந்த கோடை விடுமுறையில், பலரும் சர்பிங் விளையாட்டை கற்றுக் கொள்ள விரும்புவதால், குறைந்த கட்டணத்தில் கோடை கால சிறப்பு முகாம் விரைவில் நடைபெற உள்ளது. மேலும் விபரத்திற்கு, மூத்தியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 90030 52231.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE