அவிநாசி:அவிநாசியில் ரத வீதியோரம் குழாய் பதிக்கப்பட்ட இடங்கள் ஸ்திரத்தன்மை இழந்திருப்பதாக, புகார் எழுந்தது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. 12, 13 ஆகிய தேதிகளில் பெரிய தேரோட்டம் நடந்தது. நேற்று அம்மன் தேராட்டம் நடந்தது.கொரோனா ஊரடங்கால், கடந்த இரண்டு ஆண்டாக தேரோட்டம் நடத்தப்படாத நிலையில், இந்தாண்டு தேரோட்டம், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ, 400 டன் எடையுள்ள பெரிய தேர், வீதிகளில் வலம் வந்தது. தேர் வீதிகளின் ஓரத்தில், சில மாதங்களுக்கு முன், குழாய் பதிக்கும் பணிக்காக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில் ரோட்டோரம் தோண்டப்பட்டு, குழாய் பதிக்கப்பட்டது.ஆனால், அந்த குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால், ஆங்காங்கே ரோட்டோரத்தில் பள்ளம் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் அவை சரி செய்யப்பட்டாலும், முழு ஸ்திரத்தன்மையுடன் இல்லை.மழையின் போது, அங்கு சேறு, சகதி நிறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தேரோட்டத்தின் போது, பல இடங்களில் ரோட்டின் ஸ்திரத்தன்மை பலவீனமாக இருந்ததால், தேரோட்டத்தை தொடர்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.குறிப்பாக, வடக்கு ரத வீதியில், கோவம்ச திருமண மண்டபம் முன், சக்கரம் மண்ணில் அரையடி ஆழத்துக்கு புதைந்தது. புல்டோசர் இழுத்ததால், தேர் நகர்ந்தது. எனவே, தேர் வீதிகளை புதுப்பிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE