பள்ளி குழந்தைகளுக்கு நினைவு பரிசாக மரக்கன்று

Added : மே 14, 2022
Advertisement
அவிநாசி:நடுவச்சேரி ஊராட்சி, கருக்கன்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 172 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், 33 பேர், ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பிரிவுபச்சார விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியை ஆனந்தி, வரவேற்றார். ஊராட்சி தலைவர் வரதராஜன், தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்

அவிநாசி:நடுவச்சேரி ஊராட்சி, கருக்கன்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 172 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், 33 பேர், ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பிரிவுபச்சார விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியை ஆனந்தி, வரவேற்றார். ஊராட்சி தலைவர் வரதராஜன், தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு, நினைவுப்பரிசாக நடுவச்சேரி ஊராட்சி நர்சரியில் தயாரிக்கப்பட்ட மரக்கன்று வழங்கப்பட்டது. ஊராட்சி செயலர்மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X