இசைஞானியார் குருபூஜை விழா

Added : மே 14, 2022 | |
Advertisement
திருப்பூர்:சிவபக்தியில் சிறந்து விளங்கிய, இசைஞானியார் நாயன்மாருக்கு, திருப்பூரில் நேற்று குருபூஜை நடந்தது.63 நாயன்மார்களில், மூவர் மட்டுமே பெண்கள்; அவர்களில், இசைஞானியாரும் ஒருவர். திருவாரூரில் பிறந்த இவர், சிவபெருமான் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு, சிவபக்தையாக வளர்ந்தார்.வளர்ந்ததும், சடைய நாயனாருக்கு திருமணம் நடந்தது. இவர்கள் சிவபக்தியில் மகிழ்ந்த
இசைஞானியார் குருபூஜை விழா

திருப்பூர்:சிவபக்தியில் சிறந்து விளங்கிய, இசைஞானியார் நாயன்மாருக்கு, திருப்பூரில் நேற்று குருபூஜை நடந்தது.63 நாயன்மார்களில், மூவர் மட்டுமே பெண்கள்; அவர்களில், இசைஞானியாரும் ஒருவர். திருவாரூரில் பிறந்த இவர், சிவபெருமான் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு, சிவபக்தையாக வளர்ந்தார்.வளர்ந்ததும், சடைய நாயனாருக்கு திருமணம் நடந்தது. இவர்கள் சிவபக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாக பெறும் பாக்கியத்தை அருளினார். இசைஞானியார், சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர நாளில் முக்தியடைந்தார். திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, இசைஞானியார் குருபூஜை நடந்தது. சிவாச்சார்யார்கள், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகளை நடத்தினர்.ஓதுவார் மூர்த்திகள், சிவனடியார்கள், சுந்தரர் தேவார பதிகங்களை பாராயணம் செய்து, வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X