தொண்டி-மீன் கம்பெனிகளில்இருந்து வெளியேறும் கழிவு நீரால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டி கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் மீன் கம்பெனிகள் உள்ளன.நண்டு, இறால், கணவாய் போன்ற பல்வேறு வகையான மீன்களை சுத்தப்படுத்தி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வழியாக கிராமங்கள் அருகே செல்வதால் துர்நாற்றமாக உள்ளது. சில இடங்களில் குளம் போல் தேங்கியுள்ளது. கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. சிவப்பு நிறத்தில் வெளியேறும் கழிவுகளால் செடி, கொடிகள் பட்டுப்போகின்றன. இது குறித்து விலக்கனேந்தல் செபஸ்தியம்மாள், முடியப்பன் ஆகியோர் கூறியதாவது:கழிவு நீர் செல்லும் கால்வாய் ஓரமாக குடிநீர் குழாய் உள்ளது. குழாய் உடைப்பு ஏற்பட்டால் மீன் கழிவு நீர் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. கொசுக்கடியால் துாக்கத்தை இழந்து தவிக்கிறோம். சுகாதாரத்துறையினரிடத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீரை செல்ல மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையேல் போராட்டம்நடத்த முடிவு செய்துஉள்ளோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE