கார்கிவ் நகரில் இருந்துரஷ்ய படைகள் விலகல்

Added : மே 14, 2022
Advertisement
கீவ்:உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து ரஷ்ய படையினர் விலகிச் சென்றதாக, அந்நகர மேயர் ஐகோர் டெரிகோவ் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படையினர், பிப்ரவரி 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தினர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து ராணுவ ஆயுதங்களை பெற்று, ரஷ்ய படைகளை எதிர்த்து வருகின்றனர்.இந்த

கீவ்:உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து ரஷ்ய படையினர் விலகிச் சென்றதாக, அந்நகர மேயர் ஐகோர் டெரிகோவ் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படையினர், பிப்ரவரி 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் ராணுவத்தினர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து ராணுவ ஆயுதங்களை பெற்று, ரஷ்ய படைகளை எதிர்த்து வருகின்றனர்.இந்த போரில், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ரஷ்ய படையினர், அங்கு உக்ரைன் ராணுவத்தின் வசம் உள்ள அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு, 60க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும்; அந்த வீரர்களை பாதுகாப்பாக மீட்டுச் செல்ல, ரஷ்யா அனுமதி வழங்கவில்லை என்றும், உக்ரைன் துணை பிரதமர் ஐரினா வெரெஷ்சுக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், வடகிழக்கில் அமைந்துள்ள, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவில் இருந்து, ரஷ்ய படையினர் விலகிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, கார்கிவ் மேயர் ஐகோர் டெரிகோவ் நேற்று கூறியதாவது:கார்கிவ் நகரில் இருந்து, ரஷ்ய படையினர் விலகிச் சென்று விட்டனர். கிழக்கில் உள்ள டோனட்ஸ்க் மாகாணத்தில், குண்டு கள், ஏவுகணைகள் ஆகியவற்றை வீசி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஆயுத வினியோகம் நடக்கும் வழித்தடங்களை குறிவைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X