வைகாசி பட்டம் துவங்கியது... விவசாயிகள் சுறுசுறு

Added : மே 14, 2022
Advertisement
பொங்கலுார்:சித்திரை மாத கடும் கோடை வெப்பம் தணிந்து தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வைகாசி மாதம் பிறந்துள்ளது. இது பயிர் சாகுபடிக்கு ஏற்ற தருணம்.பயிர்கள் செழித்து வளர்வதற்கு ஏற்ற காலநிலை நிலவுவதால் விவசாயிகள் வைகாசி பட்டத்தில் சாகுபடி பணியை துவக்குவர். வைகாசி பட்டத்தில் மஞ்சளும், ஊடுபயிராக சின்ன வெங்காயமும் அதிக அளவில் சாகுபடி
வைகாசி பட்டம் துவங்கியது... விவசாயிகள் சுறுசுறு

பொங்கலுார்:சித்திரை மாத கடும் கோடை வெப்பம் தணிந்து தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வைகாசி மாதம் பிறந்துள்ளது. இது பயிர் சாகுபடிக்கு ஏற்ற தருணம்.பயிர்கள் செழித்து வளர்வதற்கு ஏற்ற காலநிலை நிலவுவதால் விவசாயிகள் வைகாசி பட்டத்தில் சாகுபடி பணியை துவக்குவர். வைகாசி பட்டத்தில் மஞ்சளும், ஊடுபயிராக சின்ன வெங்காயமும் அதிக அளவில் சாகுபடி செய்வது வழக்கம்.

இதனைஐப்பசி, கார்த்திகை மாதம் வரை இருப்பு வைக்க முடியும். அப்போது சீசன் இருக்காது என்பதால் இருப்பு வெங்காயத்தை விற்று நல்ல லாபம் பார்க்க முடியும்.ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த வெங்காயம் இன்னும் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. அறுவடை கூலிக்குக் கூட போதாததால் அறுவடை செய்யாமலேயே பெரும்பாலான வெங்காயம் காட்டிலேயே அழுகி வருகிறது.இதனால், வெங்காய சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் தவிர்க்கும் எண்ணத்தில் உள்ளனர். மஞ்சளுக்கும் போதிய விலை இல்லாததால் பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி பரப்பு சுருங்கி உள்ளது. கத்தரி, அவரை, பீர்க்கன், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
இதனால், காய்கறி சாகுபடி பரப்பு சுருங்கி, பருப்பு வகைகள் எண்ணெய் வித்துப் பயிர்கள் போன்றவற்றின் பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் சிலர் கூறியதாவது:தற்போதைய சூழ்நிலையில் தக்காளி, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றிற்கு மட்டுமே போதிய விலை கிடைக்கிறது. வைகாசி பட்டத்தில் தக்காளி நடவு பணிகள் சுறுசுறுப்படையும். பருத்தி இனிமேல் சாகுபடி செய்தால் மழையில் சிக்கிவிடும்.நிலக்கடலை, ஆமணக்கு போன்றவை வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நஷ்டம் இல்லாத பயிராக உள்ளது. எண்ணெய் வித்து பயிர்களுக்கு ஆண்டு முழுவதும் கிராக்கி நிலவுவது சாதகமான அம்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X