திருப்பூர்:தென்னம்பாளையம் அருகே, ஜம்மனை ஓடையில் நேற்று சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் ஓடியது.திருப்பூரில் மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத முறைகேடு சாய ஆலைகள், குடோன்களில் வைத்து, பட்டன், ஜிப்களுக்கு சாயமேற்றும் நிறுவனங்கள் அதிகளவில் இயங்குகின்றன.
இத்தகைய நிறுவனத்தினர், சாயக்கழிவுநீரை அருகிலுள்ள நீர் நிலை, சாக்கடை கால்வாய்களில் திறந்துவிடுவது வாடிக்கையாகியுள்ளது.அந்தவகையில், தென்னம்பாளையம் பகுதியில் இயங்கும் முறைகேடு சாய ஆலைகளிலிருந்து, சாயக்கழிவுநீர் ஜம்மனை ஓடையில் திறந்துவிடப்பட்டுவருகிறது. நேற்று பகல் நேரத்திலேயே, சாயம் கழிவு நீர் திறந்துவிடப்பட்டது. ஜம்மனை ஓடையில், சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து, முறைகேடாக இயங்கி, சாயக்கழிவை நீர்நிலையில் திறந்துவிட்டு சுற்றுச்சூழலை சீரழிக்கும் நிறுவனத்தை முடக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE