உற்பத்தி நிறுத்த போராட்டம்: பிரின்டிங் சங்கங்கள் ஆதரவு

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (ரோஸ்பா) சங்க தலைவர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:பஞ்சு மற்றும் நுால் விலையை கட்டுப்படுத்தக்கோரி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும்வகையில், வரும் 16, 17 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், திருப்பூர் பின்னலாடை துறை சங்கங்கள்

திருப்பூர்:திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (ரோஸ்பா) சங்க தலைவர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:பஞ்சு மற்றும் நுால் விலையை கட்டுப்படுத்தக்கோரி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும்வகையில், வரும் 16, 17 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், திருப்பூர் பின்னலாடை துறை சங்கங்கள் சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்துக்கு, டெக்பா மற்றும் ரோஸ்பா சங்கங்கள் முழு ஆதரவு அளிக்கின்றன.பின்னலாடை தொழிலை மீட்டெடுக்கும் பொருட்டு நடத்தப்படும் இப்போராட்டத்தில், பிரின்டிங் சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும்; நிறுவனங்களை அடைத்து, உற்பத்தி நிறுத்தம் செய்யவேண்டும்.மத்திய அரசு பருத்தி மற்றும் நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும்; பருத்தியை யூக வணிக பட்டியலிலிருந்து நீக்கவேண்டும். தமிழக நுாற்பாலைகள், இம்மாதம் உயர்த்திய கிலோவுக்கு 40 ரூபாய் நுால் விலையை, திரும்பப் பெறவேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X