திருப்பூர்:நடப்பாண்டு, 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், 'வனத்துக்குள் திருப்பூர் - 8' திட்டம் நேற்று துவங்கியது.திருப்பூர் மாவட்டதை பசுமையாக்கும் வகையில், வெற்றி அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ல் துவங்கப்பட்டது.
சாகுபடி செய்யாமல் வீணாக உள்ள தரிசு நிலம், கோவில்களுக்கு சொந்தமான நிலம், அரசு நிலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பூங்கா, பொது இடங்கள், குளம், குட்டைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்கும் திட்டம் வெற்றி அடைந்தது.'வனத்துக்குள் திருப்பூர்' முதல் திட்டத்தில், 1.35 லட்சம்; 2ல், 2.25 லட்சம்; 3ல், 1.55 லட்சம்; 4வது திட்டத்தில், 1.50 லட்சம்; 5ல், 1.35 லட்சம்; 6 ல், 2.50 லட்சம்; 7வது திட்டத்தில், 2.60 லட்சம் மரக்கன்றுகள் என, ஏழு ஆண்டுகளில், 13.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.நடப்பாண்டு, 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் இலக்குடன், 8 வது திட்டம் துவக்க விழா, உடுமலை அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.
வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், பி.டி.ஓ., சுப்ரமணியம், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன், நில உரிமையாளர்கள் விஸ்வநாதன், மணி மற்றும் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நேற்று, மூன்று ஏக்கர் பரப்பளவில், தேக்கு, குமிழ், செம்மரம், சந்தனம் என, 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டு, சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவில், ஊராட்சியை பசுமையாக்கும் பணியில் பாடுபட்ட, நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் கொரோனா காலத்தில், சிறப்பாக பணியாற்றிய முன் களப்பணியாளர்கள், கிராமப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.நிழல்தரும் மரங்கள், நீண்ட நாட்களுக்கு பின் வருவாய் அளிக்கும் மரங்கள், பறவைகளுக்கு உணவளிக்கும் பழ மரங்கள், மலர் தரும் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு மரங்கள் நடவு செய்யப்படுகின்றன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement