எமனேஸ்வரத்தில் வைகாசி வசந்த உற்ஸவ விழா:இன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார்

Added : மே 14, 2022
Advertisement
பரமக்குடி--எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழாவில் இன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார்.எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான இக்கோயிலில், கடந்த 10 நாட்களாக பிரமோற்ஸவம் நடந்து நேற்று கொடியிறக்கத்துடன்விழா நிறைவடைந்தது. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு உற்ஸவர்மற்றும் மூலவருக்கு கும்பா திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை

பரமக்குடி--எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழாவில் இன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார்.எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான இக்கோயிலில், கடந்த 10 நாட்களாக பிரமோற்ஸவம் நடந்து நேற்று கொடியிறக்கத்துடன்விழா நிறைவடைந்தது. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு உற்ஸவர்மற்றும் மூலவருக்கு கும்பா திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.இரவு 3:00 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். தொடர்ந்து நாளை காலை 10:00 மணிக்கு மேல சத்திரத்திலிருந்து குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி மதியம் 3:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிக்கிறார்.இதனை தொடர்ந்து பெருமாள் தினமும் சேஷ, கருட, ஹனுமன் வாகனங்களில் அருள்பாலிப்பார்.ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X