சரத் பவார் பற்றி விமர்சனம் : மராத்தி நடிகை கைது

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (17)
Advertisement
மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பற்றி, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே, சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத் பவார் ,விமர்சனம் ,மராத்தி நடிகை கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பற்றி, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே, சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை காட்டமாக விமர்சித்திருந்தார்

அப்பதிவில், 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்; உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது' என கூறியிருந்தார். இது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.


latest tamil news



இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், 'சரத் பவார் எங்களுக்கு தந்தை போன்றவர். அவரை விமர்சிப்பதை ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் துாண்டுதல்படி தான், பவாரை கேதகி சிதலே விமர்சித்துள்ளார். அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதையடுத்து, நடிகை கேதகி சிதலே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை இன்று மாலை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kona vayan -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202220:32:52 IST Report Abuse
kona vayan ,,,,
Rate this:
Cancel
15-மே-202211:22:43 IST Report Abuse
kulandai kannan மராட்டியத்தில் அடிப்படை உரிமைகள் எதுவும் செல்லுபடியாகாதா??
Rate this:
Cancel
15-மே-202211:22:40 IST Report Abuse
kulandai kannan ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X