அடிக்கடி பழுதாகும் சிக்னல்: காரணம் பேட்டையில் சிக்கல்

Added : மே 14, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி -- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கிறது.தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் காரணம்பேட்டை நால்ரோடு சிக்னலை கடந்து செல்கின்றன. இதன் காரணமாக, நால்ரோடு சிக்னல், வாகனப் போக்குவரத்து நிறைந்து, எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து

பல்லடம்:பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி -- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கிறது.தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் காரணம்பேட்டை நால்ரோடு சிக்னலை கடந்து செல்கின்றன. இதன் காரணமாக, நால்ரோடு சிக்னல், வாகனப் போக்குவரத்து நிறைந்து, எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நிறைந்த இந்த சிக்னல், அடிக்கடி பழுதாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'காரணம்பேட்டை சிக்னலின் நான்கு பக்கமும் இருந்து வாகனங்கள் இடைவெளியின்றி வர, சிக்னல் அடிக்கடி பழுதாகின்றது.சிக்னல் பயன்பாட்டில் உள்ளதா இல்லையா என்றே தெரியாமல் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.இதனால், நான்கு பக்கமும் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கவனக் குறைவு ஏற்படுகிறது. சிக்னல் அவ்வப்போது சரி பார்க்கப்பட்டாலும், மீண்டும் பழுதாகிறது.இது விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், சிக்னலை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X