தனுஷ்கோடியில் ரூ.7.09 கோடியில்கலங்கரை விளக்கம் திறப்பு

Added : மே 14, 2022
Advertisement
ராமநாதபுரம்,-தனுஷ்கோடியில் ரூ.7.09 கோடியில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்தார். சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் 2020 பிப்.18 ல் கலங்கரை விளக்கம் கட்டும் பணிகளுக்கு மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஞ்சு மாண்டவியர் அடிக்கல் நாட்டினார். பணிகள்

ராமநாதபுரம்,-தனுஷ்கோடியில் ரூ.7.09 கோடியில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்தார். சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் 2020 பிப்.18 ல் கலங்கரை விளக்கம் கட்டும் பணிகளுக்கு மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஞ்சு மாண்டவியர் அடிக்கல் நாட்டினார். பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது. தனுஷ்கோடி வந்த சுற்றுலாப்பயணிகள் 229 பேர் கலங்கரை விளக்கத்தில் ஏறி தனுஷ்கோடி கடல் மற்றும் இயற்கை அழகை ரசித்தனர். கலங்கரை விளக்கத்தில் ஏற அமைக்கப்பட்டுள்ள லிப்ட் அடுத்த மாதம் முதல் செயல்பட உள்ளது. நேற்று முதல் நாளில் மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் ஒரு நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X