மண்டப 'லிப்ட்' அறுந்து மாணவர் பலி'மாஜி' அமைச்சரின் மகள் எங்கே?

Added : மே 14, 2022 | கருத்துகள் (1)
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், மண்டப 'லிப்ட்' அறுந்து, பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மண்டப உரிமையாளரான அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஜெயகுமாரின் மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.பாரம் தாங்காமல்திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் சந்திப்பில், 'ஜெ.எப்.என்., பாரடைஸ்'

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், மண்டப 'லிப்ட்' அறுந்து, பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மண்டப உரிமையாளரான அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஜெயகுமாரின் மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

பாரம் தாங்காமல்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் சந்திப்பில், 'ஜெ.எப்.என்., பாரடைஸ்' என்ற பெயரில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயப்ரியா பெயரில் அந்த மண்டபம் உள்ளது.நேற்று முன்தினம் நடந்த திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்றில், சமையல் பிரிவில் வேலை செய்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த ஷீத்தல், 17, என்ற பிளஸ் 1 பயிலும் மாணவர் வந்திருந்தார்.கீழ் தளத்தில் உள்ள சமையல் அறையில் இருந்து, உணவு மற்றும் பாத்திரங்கள் மட்டும் அனுப்பப்படும் லிப்டில், ஷீத்தல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், 23, விக்னேஷ், 21, ஆகியோர் 'நுாடுல்ஸ்' ஏற்றிச் சென்றனர்.

நான்கு பேர் மீது வழக்கு
பாரம் தாங்காமல், லிப்ட்டின் கயிறு அறுந்து துண்டானது. இதனால், லிப்ட் கீழ் நோக்கி வேகமாக இறங்கியது.இதில் தடுமாற்றம் அடைந்த ஷீத்தல், லிப்டின் இடுக்குகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம்அடைந்த மற்ற இருவரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், மண்டப உரிமையாளரான ஜெயப்ரியா, மேற்பார்வையாளர் வெங்கடேசன், 40, மேலாளர் திருநாவுக்கரசு, 32, 'லிப்ட் ஆப்பரேட்டர்' கக்கன், 23, ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்தனர்.மூவரை கைது செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயப்ரியாவை தேடி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
15-மே-202200:51:43 IST Report Abuse
John Miller இது முன்னாள் மந்திரி ஜெயக்குமாரின் கள்ள பணத்தில் கட்டப்பட்ட கல்யாண மண்டபம் இது. எனவே அவரும் இந்த மாணவனின் மரணத்துக்கு காரணம். அதனால் அவரையும் அவரது பையனையும் உடனே கைது செய்து புழலில் அடைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X