சிறுவாணி குறித்து கேரளாவுடன்...இது பேசும் நேரம்! நீர்மட்டம் வேகமாக சரிகிறது

Updated : மே 15, 2022 | Added : மே 14, 2022 | |
Advertisement
கோவை:சிறுவாணி அணையின் நீர் மட்டம், 18.5 அடியாக தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் நிலையில், கேரள அரசுடன் தமிழக அதிகாரிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கோரிக்கை வலுத்துள்ளது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தமிழக-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. சில ஆண்டுகளாக, 45 அடி வரை மட்டுமே
சிறுவாணி குறித்து கேரளாவுடன்...இது பேசும் நேரம்! நீர்மட்டம் வேகமாக சரிகிறது

கோவை:சிறுவாணி அணையின் நீர் மட்டம், 18.5 அடியாக தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் நிலையில், கேரள அரசுடன் தமிழக அதிகாரிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கோரிக்கை வலுத்துள்ளது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தமிழக-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. சில ஆண்டுகளாக, 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்க கேரளா அரசு அனுமதிக்கிறது.
பருவ மழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேங்காது, கூடுதல் தண்ணீரை, கேரள பொதுப்பணித் துறையினர் ஆற்றில் வெளியேற்றுகின்றனர். இதனால், கோடை காலங்களில் கோவை மாநகராட்சிக்கும், வழியோர பகுதிகளுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதில்லை.இரு மாநில ஒப்பந்தத்தின்படி, கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காக, தினமும், 10.1 கோடி லிட்டர் கேரள அரசு தண்ணீர் வழங்க வேண்டும். சமீபகாலமாக ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்காததுடன், நீர்புகு கிணற்றில் உள்ள நான்காவது வால்வும் மூடப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 18.5 அடியாக இருந்து, 5.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. நீர் மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிநீர் வினியோக இடைவெளி, 10 நாட்களுக்கும் மேல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
சமீபத்தில் கோவை வந்த தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சிறுவாணி அணை ஒப்பந்தப்படி தண்ணீர் பெறுவது தொடர்பாக, கேரள அரசுடன் தமிழக அதிகாரிகள் விரைவில் பேச்சு நடத்துவர் என, தெரிவித்து சென்றார். பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி, தீர்வு கண்டால் மட்டுமே குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க முடியும். ஜூன் இரண்டாவது வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கி, சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி போதிய ஒத்துழைப்பு வழங்க, பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X