காங்கிரஸ் சிந்தனை முகாம் - திருநாவுக்கரசர் 'ஆப்சென்ட்'

Added : மே 14, 2022 | |
Advertisement
சென்னை:ராஜஸ்தானில் நடந்து வரும் காங்கிரஸ் சிந்தனை முகாமில், தமிழகத்தை சேர்ந்த அக்கட்சி எம்.பி.,க்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கவில்லை.கட்சி மறுசீரமைப்பு குறித்தும், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 லோக்சபா தேர்தலுக்கு வியூகம் வகுக்கவும்,

சென்னை:ராஜஸ்தானில் நடந்து வரும் காங்கிரஸ் சிந்தனை முகாமில், தமிழகத்தை சேர்ந்த அக்கட்சி எம்.பி.,க்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கவில்லை.
கட்சி மறுசீரமைப்பு குறித்தும், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 லோக்சபா தேர்தலுக்கு வியூகம் வகுக்கவும், மூன்று நாள் சிந்தனை முகாமிற்கு, காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த கூட்டத்தில், அகில இந்திய நிர்வாகிகள், மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.,க்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது.ஆனாலும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில், தமிழக எம்.பி.,க்களான திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கவில்லை. சொந்த வேலை காரணமாக, அவர்கள் ராஜஸ்தான் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X