ஹெட்மாஸ்டர் என்றால் இப்படி இருக்க வேண்டும்!

Added : மே 14, 2022 | |
Advertisement
கோவை,:மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ளவும், நேரத்தை பயனுள்ளதாக கழிக்கவும் கோவைப்புதுார் சி.பி.எம்., சகுந்தலா வித்யாலயா அரசு உதவி

கோவை,:மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ளவும், நேரத்தை பயனுள்ளதாக கழிக்கவும் கோவைப்புதுார் சி.பி.எம்., சகுந்தலா வித்யாலயா அரசு உதவி பெறும் பள்ளி, புது முயற்சி எடுத்துள்ளது.

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, அப்பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களை, கோவைப்புதுார் அரசு நுாலகத்தில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். அதற்கான சந்தா கட்டணத்தை, தங்கள் சொந்த செலவில் அப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விஜயகுமார், யுவராஜா ஆகியோர் செலுத்தியுள்ளனர்.

நுாலகத்தில் உறுப்பினராக சேர்ந்த மாணவர்கள், கோடை விடுமுறை நாட்களில், தினசரி அரசு நுாலகம் சென்று புத்தகங்களை வாசித்து, அது பற்றிய விவரங்களை தலைமை ஆசிரியர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவிடுகின்றனர்.100 மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய அரசு நுாலகர் விஜயன், தலைமை ஆசிரியர்கள் முயற்சியை பாராட்டினார். வகுப்பறை நுாலகம் திட்டத்தில், அனைத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கு நுால்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X