அண்ணாமலை மீதுபோலீசார் வழக்கு பதிவு

Added : மே 14, 2022
Advertisement
திருவாரூர்:திருவாரூரில், 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருவாரூர் நகராட்சி முதல் கூட்டம் ஏப்., 11ம் தேதி நடந்தது. இதில், திருவாரூர் தெற்கு ரத வீதியை, 'டாக்டர் கலைஞர் சாலை' என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு பா.ஜ., உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

திருவாரூர்:திருவாரூரில், 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் நகராட்சி முதல் கூட்டம் ஏப்., 11ம் தேதி நடந்தது. இதில், திருவாரூர் தெற்கு ரத வீதியை, 'டாக்டர் கலைஞர் சாலை' என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு பா.ஜ., உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜ., சார்பில், 12ம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், இந்த தீர்மானத்தை எதிர்த்து திருவாரூர் தெற்கு ரத வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இதையடுத்து, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம், நகர தலைவர் சங்கர், மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உட்பட ஐந்து பேர் மீது, அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுப் பாதையை வழிமறித்தது ஆகிய மூன்று பிரிவுகளில், திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X