ஊட்டி:ஊட்டி ரோஜா கண்காட்சியில், 80 ஆயிரம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பல மலர் அலங்காரங்கள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.
40 ஆயிரம் வகை
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில், நேற்று 17வது ரோஜா கண்காட்சி நடந்தது. ரோஜா பூங்காவில், 4,000 ரகங்களில் 40 ஆயிரம் வகையான ரோஜாக்கள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.நீலகிரி தோட்டக்கலை சார்பில், 30 ஆயிரம் ரோஜாக்கள் மூலம், 15 அடி உயரத்திற்கு அழகிய மர வீடு அமைக்கப்பட்டுஉள்ளது.
மேலும், 50 ஆயிரம் ரோஜாக்கள் மூலம் அரசின் புதிய திட்டமான, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அனைவரும் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பை போன்ற மலர் வடிவமைப்பு செய்யப்பட்டது வித்தியாசமாக இருந்தது.
திருநெல்வேலி, திருப்பூர், மதுரை, திருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலை துறையினரால், ரோஜா மலர்களை கொண்டு குழந்தைகளை கவரும் விதமாக கார்டூன் கதாபாத்திரமான மோட்டு பட்லு, மான், பியானோ மற்றும் பனி மனிதன் போன்ற, 10க்கும் மேற்பட்ட அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 124வது மலர் கண்காட்சி, இம்மாதம் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

உள்ளூர் விடுமுறை
இதனால், 20ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வுகள் வழக்கம் போல் நடக்கும். விடுமுறை நாளை ஈடுசெய்ய ஜூன் 4ல் பணி நாளாகும் என, கலெக்டர் அம்ரீத் அறிவித்துள்ளார். உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement