கோவை:கோவை கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிய வாலிபரை, உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.கோவை உக்கடம் சி.எம்.சி., காலனி மதுரை வீரன் கோவில் பகுதியில் வசிக்கும் வீரமுத்து மகன் நிர்மல் குமார், 22. இவர், பேரூர் தமிழ்க்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., படித்து வருகிறார்.கல்லுாரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம், உக்கடம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்தார்.
அப்போது அந்த வழியில் 23 ஏ தனியார் பஸ் அங்கு வந்தது. அதில் அமர்ந்திருந்த வாலிபர், நிர்மல் குமாரை அழைத்து, பின்புறமாக நிற்கும் பெண்ணை கூப்பிடுமாறு கூறினார். அதற்கு நிர்மல் குமார் மறுத்து விட்டார்.ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், பஸ்சில் இருந்து இறங்கி நிர்மல் குமாரை சரமாரியாக தாக்கினார். கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார்.முகத்தில் படுகாயம் அடைந்த நிர்மல்குமார், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது காயத்துக்கு 10 தையல்கள் போட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.கத்தியால் குத்திய நபரை, உக்கடம் போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE