அன்னூர்:குப்பையை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரூராட்சி இயக்குனரகம் சார்பில், அனைத்து பேரூராட்சிகளிலும், இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பஸ் ஸ்டாண்ட், சந்தை, பூங்கா, பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இதன்படி, சர்க்கார் சாமகுளம் பேரூராட்சியில் நேற்று தூய்மைப் பணியாளர்கள் பஸ் ஸ்டாண்ட், வார சந்தை பகுதிகளில் குப்பை அகற்றினர்.பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் மணி, செயல் அலுவலர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அன்னூர் பேரூராட்சி சார்பில் பஸ்ஸ்டாண்டில் தூய்மை பணி செய்யப்பட்டது. பள்ளி மாணவ மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தரைமட்ட தொட்டி வார சந்தை வளாகம் ஆகிய இடங்கள் தூய்மை செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE