திருக்கோஷ்டியூர்:சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் திருப்பணியை யொட்டி லட்சுமி நரசிம்மர் சிலையில் தங்கத்தகடு பதிக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா துவக்கி வைத்தார்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலுக்கு நேற்று காலை துர்கா வந்தார். கோயில், ராணி மதுராந்தகி நாச்சியார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தேரில் எழுந்தருளிய உற்ஸவ பெருமாளை தரிசித்தார். அங்கு பட்டாச்சாரியர்கள் முதல்வர், அவரது குடும்பத்தினரின் பெயருக்கு அர்ச்சனை செய்தனர். தேரின் மேலே உற்ஸவரை வலம் வந்த அவர் பின்னர் கோயிலுக்கு வந்தார்.அங்கு லட்சுமிநரசிம்மருக்கு தங்கத்தகடு பதிக்கும் பணியை அவர் துவக்கி வைத்தார்.
அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், அறநிலையத்துறை துணை ஆணையாளர் செல்வராஜ், ஆண்டாள் பேரவையினர், கொடையாளர்கள், மல்லாக்கோட்டை, பட்டமங்கலம், நாட்டார், திருப்பணிக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பின்னர் சயன கோலத்திலுள்ள மூலவர், தாயார், ஆண்டாள், ராமானுஜர்,திருக்கோஷ்டியூர் நம்பிகள் சன்னதிகளுக்கு சென்று தரிசித்தார். துர்காவுடன் அவரது சகோதரி,பெண் உதவியாளர் வந்திருந்தனர். ஒரு மணி நேரம் கோயிலில் இருந்தனர்.
தையில் திருப்பணி நிறைவு