விருதுநகர் சிறையில் கைதிகள் மோதல் : ஒருவர் காயம்

Added : மே 15, 2022
Advertisement
விருதுநகர்:விருதுநகர் சிறையில் ஜாமின் எடுப்பது தொடர்பாக கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.விருதுநகர் வீரசோழனை சேர்ந்த சிலம்பரசன், இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய நால்வரும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலம்பரசன் வழக்கு தொடர்பாக ஜாமின் பெற்று வெளியே வருவதற்கான முயற்சிகளை

விருதுநகர்:விருதுநகர் சிறையில் ஜாமின் எடுப்பது தொடர்பாக கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
விருதுநகர் வீரசோழனை சேர்ந்த சிலம்பரசன், இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய நால்வரும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலம்பரசன் வழக்கு தொடர்பாக ஜாமின் பெற்று வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்போது கூட்டாளிகள் 3 பேரும் தங்களுக்கும் ஜாமின் விண்ணப்பிக்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அதற்கு சிலம்பரசன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் காலை உணவு வேளைக்காக வெளியே வந்த போது சிலம்பரசனை பலமாக தாக்கினர். சிறைக்காவலர்கள் மோதலை தடுத்து காயமடைந்த சிலம்பரசனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறைக்கண்காணிப்பாளர் தாமரைக்கனி புகாரில் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X