ராமநாதபுரம்:தனியாரிடம் மின்சாரம் வாங்குவதால் தான் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது, என்று தமிழ்நாடு மின் வாரிய சி.ஐ.டி.யு., மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க 32வது மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியது:தமிழகத்தில் இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படும் நிலையில், மின்சார வாரியத்தில் 52 ஆயிரம் பணியிடங்களை காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். தமிழக அரசே மின் உற்பத்தியை துவங்க வேண்டும். தரமான மின் உதிரி பாகங்களை வழங்க வேண்டும்.
தற்போது 1964க்கு முன் உள்ள மின்கம்பிகள் தான் பயன்பாட்டில் உள்ளது. இவை மழைக் காலங்களில் பழுதடைகின்றன. ஊழியர்களால் மின்வாரியம் நஷ்டம் அடையவில்லை. தனியாரிடம் மின்சாரம் வாங்குவதால் தான் நஷ்டம் ஏற்படுகிறது.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசு தயங்குகிறது. நிதி பற்றாக்குறையை காரணம் கூறுவதை தவிர்த்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE