மரக்காணம்:மரக்காணம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில், மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அபினேஷ், 22; இவர், சில ஆண்டுகளுக்கு முன் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு, அவர்களை கொலை செய்து புதைத்தார்.
மரக்காணம் போலீசார் அபினேஷை சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அபினேஷை, நொச்சிக்குப்பம் மீனவ கிராம மக்கள் ஊரை விட்டு விரட்டியத்தனர்.அபினேஷ் தன் தாயுடன், புதுச்சேரி மாநிலம், சோலை நகரில் வாடகை வீட்டில் வசித்தார். அங்கும் சில சிறுவர்களிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த, சோலை நகரைச் சேர்ந்த கலையரசன், 50; அபினேஷை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அபினேஷ், கலையரசனை கடலில் தள்ளி கொலை செய்தார். புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்தனர்.இந்நிலையில், கோட்டக்குப்பம் அடுத்த மரைக்காயர் தோப்பு பகுதியில் ஏப்., 8ம் தேதி தேதி, அபினேஷை ஐந்து பேர் கும்பல் கொலை செய்தது.
கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, சோலை நகரைச் சேர்ந்த அஜித்ராஜ், 21; கோட்டக்குப்பம் அரவிந்த், 22; சோலை நகர் சதீஷ், 20. சோதனைக்குப்பம் அகமது அசேன், 22; சின்ன கோட்டக்குப்பம் அப்பு, 21; ஆகியோரை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இதில் சதீஷ், அகமது அசேன், அப்பு, ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE