திருவண்ணாமலை:இலங்கை மக்களுக்கு அனுப்ப தயாராகும் 'ஆவின்' பால் பவுடர் உற்பத்தியை, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நம் அண்டை நாடான இலங்கைக்கு, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வாயிலாக, 5 லட்சம் கிலோ பால் பவுடர் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, திருவண்ணாமலை அடுத்த அம்மாபாளையத்தில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலையில், பால் பவுடர் உற்பத்தி செய்யும் பணியை, அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.
அமைச்சர் நாசர் கூறுகையில், ''திருவண்ணாமலை, அம்மாபாளையத்தில் உள்ள ஆவின் பால்பவுடர் தொழிற்சாலையில், 1.5 லட்சம் கிலோ, சேலத்தில், 1.5 லட்சம் கிலோ, ஈரோட்டில், 2 லட்சம் கிலோ பால் பவுடர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை மூன்று இடங்களில், 3 லட்சம் கிலோ உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE