தஞ்சாவூர்:''நிதி அமைச்சரை கண்டித்து மே 25ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று சங்கத்தின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க வந்த சண்முகராஜன் அளித்த பேட்டி:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்ததால், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் 97 சதவீதம் பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தனர்.
கடந்த, 2021 டிச., 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது, 'பொருளாராத நிலை தற்போது தான் சீராகி வருகிறது; படிபடியாக கோரிக்கை நிறைவேற்றபடும்' என, உறுதியளித்தார்.கடந்த 7ம் தேதி, 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது' என, சட்டசபையில் நிதியமைச்சர் கூறியது, அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை சட்டசபையில் அறிவிக்க வேண்டிய நோக்கம் என்ன?நிதியமைச்சரின் அறிவிப்பை கண்டித்து, மே 25ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அனைத்து தொழிற்சங்களுடன் இணைந்து கருத்தரங்கம், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE