உத்தமபாளையம்:'' தமிழகம் முழுவதும் ரூ.50 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய்,10 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த ஆய்வு செய்து வருகிறோம்,'' என, பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் பணி, குப்பைக் கிடங்கு பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த செல்வராஜ், குப்பையில்லா நகரம் குறித்த விழிப்புணர்வுக்காக டூவீலர் ஊர்வலம் துவக்கி வைத்தார்.
அவர் மேலும் கூறியதாவது:கடந்த பட்ஜெட் கூட்டத்தில் 38 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. மேலும் ஆய்வு நடக்கிறது. வண்டலுார், பெருங்குடி போன்ற பெரிய ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன, என்றார். எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் காசிம், உதவி செயற்பொறியாளர் ராஜாராம், செயல் அலுவலர் கணேசன் உடன் இருந்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement