கொடைக்கானல்:திண்டுக்கல்மாவட்டம்கொடைக்கானலில் நேற்று தொடர் மழையால் சுற்றுலா பயணிகள், குடையுடன் வலம் வந்தனர்.
விடுமுறை நாளான நேற்று ஏராளமான வாகனங்கள் கொடைக்கானலில் முகாமிட்டன.சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனிடையே காலை 11:00 மணிக்கு தொடங்கிய மழை மாலை வரை பெய்து கொண்டே இருந்தது.எனினும் பிரையன்ட்பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி கோக்கர்ஸ் வாக், வனச் சுற்றுலாத்தலங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்தனர். இதுபோல் குதிரை, சைக்கிள், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். எனினும் மழையால் பெரும்பாலான பயணிகள் விடுதியில் முடங்கினர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக்கூட்டத்துடன் இதமான சூழல் என மழை நகர் சில்லிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE