ராமநாதபுரம்:ஜாதி பெயரை சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டிய பி.டி.ஓ., ராஜேந்திரன் பதவி உயர்வு பெற்றும் இன்னும் விடுவிக்கப்படாததற்கு எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள், மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சேக்கிழார் கூறியது:முதுகுளத்துார் பி.டி.ஓ., ராஜேந்திரனுக்கு சிவகங்கை மாவட்ட ஊரக புத்தாக்க திட்ட உதவி இயக்குனராக ஏப்.22ல் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டது. அவருடன் பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட மற்ற 59பேரும் அடுத்த நாளே பணி விடுவிப்பு செய்யப்பட்டுபணியில் சேர்ந்துவிட்டனர்.
ஆனால், ராஜேந்திரனைமட்டும் இதுவரை பணி விடுவிப்பு செய்யவில்லை. அவர் கலெக்டரை சந்தித்து கேட்ட போது, சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நிறுத்தி வைக்க கடிதம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.ஐந்தாண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றியங்களில் தனியார் நிறுவனம் மூலம் எல்.இ.டி., மின் விளக்குகள் வாங்கினர். அவற்றை பொருத்தும் செலவுகளை ஒன்றிய நிதியில் இருந்து செலவழித்துள்ளனர்.
இதற்கான கணக்கை தாக்கல் செய்த போது அந்த தனியார் நிறுவனமும் பொருத்துதல் செலவு செய்ததாக கணக்கு கொடுத்துள்ளது.தணிக்கையில் இது தெரிய வந்தது. முறையான வழிகாட்டுதல் இல்லாததால் இவ்வாறு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ஐந்து பி.டி.ஓ.,க்கள் இந்த பிரச்னையில் சிக்கி உள்ளனர். அந்த குற்றச்சாட்டிற்காக பணி விடுவிப்பு செய்ய வில்லை, என தற்போது கூறியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உள்ள ஒருவர் நான்கு ஆண்டிற்கு முன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் குற்றச்சாட்டு இருந்தால் பதவி உயர்வு பேனல் தயாரிக்கும் போதே நீக்கி இருக்க வேண்டும்.மேலும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் குற்றச்சாட்டு இருந்தாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் பதவி உயர்வு அளிக்கலாம், என கூறப்பட்டுள்ளது. எனவே, ராஜேந்திரனை பணி விடுவிப்பு செய்யாததில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement