ராமநாதபுரம்:மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில்ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய ஆறு வயது சிறுவன் நியாஸ் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையைசேர்ந்தவர் நிதர்ஷன். கூலித்தொழிலாளி. இவர் மனைவிமேரிஜிட்சேனா, மகன் நியாஸ் மற்றும் மகளுடன் 2012ல் அகதியாக வந்தார். தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கின்றனர்.நேற்று காலை நியாஸ்ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது படுக்கையில் படுத்தபடி நாணயத்தை வாயில் போட்ட போது திடீரென தொண்டைக்குள் சென்றது. தொண்டை பகுதியில் சிக்கியதால் அதனை எடுக்க முடியவில்லை. இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.எக்ஸ்ரேஎடுக்கப்பட்டதில் நாணயம் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து காது, மூக்குத் தொண்டை சிகிச்சைப் பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். நாணயத்தை அகற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE