பழநியில் அக்னி நட்சத்திர கிரிவலம்:உள்ளூர்,வெளிமாவட்ட பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Added : மே 15, 2022
Advertisement
பழநி:பழநியில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவதையொட்டி அதிகாலை,மாலையில் கடம்பமலரைக் கையில் வைத்தபடி உள்ளூர்,வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் வருகின்றனர்.பழநியில் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்கள் ,வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்கள் அக்னி நட்சத்திர விழா நடக்கும். இந்தாண்டு விழா மே 8 ல் துவங்கியது. மே 21 வரை நடக்கும் சித்திரை கழுவு எனும் இவ்விழாவில் உள்ளூர்,

பழநி:பழநியில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவதையொட்டி அதிகாலை,மாலையில் கடம்பமலரைக் கையில் வைத்தபடி உள்ளூர்,வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் வருகின்றனர்.
பழநியில் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்கள் ,வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்கள் அக்னி நட்சத்திர விழா நடக்கும். இந்தாண்டு விழா மே 8 ல் துவங்கியது. மே 21 வரை நடக்கும் சித்திரை கழுவு எனும் இவ்விழாவில் உள்ளூர், திண்டுக்கல்மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி சேலம், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம்.

இந்நாட்களில் மலைக்கோயிலில் கிரிவலம் வரும்போது மூலிகை காற்று வீசுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.பெண்கள் கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் அதனை வைத்தபடி அதிகாலை,மாலையில் மலைக்கோயிலை கிரிவலம் வருவர். இன்று பவுர்ணமியுடன் சேர்த்து இவ்விழாவுக்கு வைகாசியில் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளதால் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அவர்கள் கூறியதாவது:


நன்மை பயக்கும்

ஆதிலட்சுமி, பழநி :பழநியில் சித்தர்கழுவு விழா14 நாட்கள் கிரிவலம் வருவது மிகவும் நல்லது. ஆண்டு தோறும் கிரிவலம் வருகிறேன். இந்நேரத்தில் சஞ்சீவி காற்று கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடம்பமலர் முருகனுக்கு உகந்தது.அதை அணிந்து கிரிவலம் வருவது நன்மை பயக்கும்

நோய்கள் விலகும்
சகாதேவராஜாபிரபு, பழநி: அதிகாலையில் கடம்பமலர் உடன் கிரிவலம் வருவதால் நோய்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று வைகாசி மாதப்பிறப்பு, பவுர்ணமியில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X