கோவை:குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்திய இரு நிறுவனங்களுக்கு, ரூ.80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோவை மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெங்கடேசன் அறிக்கை: கோவைப்புதுாரில் வீட்டு வேலைக்கு பணிக்கு அமர்த்திய, வீட்டின் உரிமையாளர் மந்திப்போரா மற்றும் குனியமுத்துார் பகுதியிலுள்ள உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர் சுதீர் அஜீஸ் ஆகியோர் மீது குழந்தை தொழிலாளர் (ஒழிப்பு) மற்றும் தடை செய்தல் சட்டத்தின் கீழ், 1986 ன் படி 14 வயதிற்குட்பட்ட சிறுவனை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.கோவை முதன்மை நடுவர் நீதிமன்றத்தில், கோவை தொழிலாளர் உதவி ஆய்வரால் (8ம் சரகம்)வழக்கு தொடரப்பட்டு மே 12 அன்று மாவட்ட முதன்மை நீதிபதி ஒவ்வொருவருக்கும், தலா 40,000 ரூபாய் என மொத்தம் 80,000 ரூபாய் அபராதம் விதித்தார். இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE