உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலிதி.மு.க., பிரமுகர் கொலையில் திடுக் தகவல்| Dinamalar

உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலிதி.மு.க., பிரமுகர் கொலையில் 'திடுக்' தகவல்

Added : மே 15, 2022 | |
சென்னை:மணலி தி.மு.க., பிரமுகர் படுகொலை சம்பவத்தில், உடலை துண்டு துண்டாக வெட்ட, தலைப் பகுதியை அடையாறு ஆற்றில் வீசிய கும்பல், போலீசாரிடம் சிக்காமல் இருந்திருந்தால் உடலின் பிற பகுதிகளை வெவ்வேறு இடங்களில் வீச இருந்தது தெரியவந்தது.சென்னை மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி 65; இவர், திருவொற்றியூர், 7வது வார்டு தி.மு.க., பிரதிநிதி. இவரது மனைவி லட்சுமி.
உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலிதி.மு.க., பிரமுகர் கொலையில் 'திடுக்' தகவல்

சென்னை:மணலி தி.மு.க., பிரமுகர் படுகொலை சம்பவத்தில், உடலை துண்டு துண்டாக வெட்ட, தலைப் பகுதியை அடையாறு ஆற்றில் வீசிய கும்பல், போலீசாரிடம் சிக்காமல் இருந்திருந்தால் உடலின் பிற பகுதிகளை வெவ்வேறு இடங்களில் வீச இருந்தது தெரியவந்தது.
சென்னை மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி 65; இவர், திருவொற்றியூர், 7வது வார்டு தி.மு.க., பிரதிநிதி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சக்கரபாணி மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, மணலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர். சக்கரபாணியின் மொபைல் போன், ராயபுரம், கிரேஸ் கார்டன் 3வது தெருவில் வசிக்கும் தமீம்பானு, 40, என்ற பெண்ணின் வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது, தமீம் பானு, அவரது தம்பி வாசிம் பாஷா ஆகியோர் இருந்தனர்.
போலீசாரின் சோதனையில் கழிப்பறையில் ரத்தக்கறையுடன், சாக்கு மூட்டை கிடந்தது. சாக்கு மூட்டையை பிரித்தபோது, அதில், சக்கரபாணியின் உடல், துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. தலை பகுதி மாயமாகி இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமீம்பானு, அவரது தம்பி வாசிம்பாஷாவை கைது செய்தனர். தலைமறைவான டில்லிபாபு என்பவர்,கைது கைது செய்யப்பட்டார்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், அடையாற்றில் தலையை வீசிவிட்டதாக தெரிவித்தனர். அன்று இரவே, ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றும், மூன்று படகு, 30 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடினர். இரண்டு நாட்களாக தேடியும் சக்கரபாணியின் தலை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தமீம்பானு போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:நான் மணலியில் குடியிருந்தேன். என் கணவர் தி.நகரில் பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்கிறார். சக்கரபாணியிடம் கடன் வாங்குவேன். அதில் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகி, ராயபுரம் வந்தேன். கணவர் வாரம் ஒருமுறை தான் வீட்டிற்கு வருவார். இதைப்பயன்படுத்தி, நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சக்கரபாணி, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார்.
கடந்த 10ம் தேதி, உறவுக்கு அழைத்தார். இதனால், எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த தம்பி வாசிம் பாஷா ஆத்திரமடைந்து, சுவரில் மோதியும், கத்தியால் குத்தியும் சக்கரபாணியை கொன்றார். பின்னர் என்ன செய்வது என தெரியாமல், டில்லிபாபுவை அழைத்தோம்.அவர் வந்த பின், இறைச்சி வெட்டும் கத்தியால் சக்கரபாணியின் தலையை வெட்டினோம். பின்னர், உடலை 10 துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டினோம்.

தலையை அடையாறு ஆற்றிலும், குடல் பகுதியை காசிமேடு கடல் பகுதியிலும் வீசினோம்.உடலை நேரம் பார்த்து கடலில் வீச இருந்தோம். போலீசில் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
டில்லிபாபு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:தமீம்பானுவுக்கும், எனக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. சக்கரபாணி தொடர்ந்து தமீம்பானுவுக்கு தொல்லை கொடுத்ததால் கொன்றோம். பிணவாடை வராமல் இருக்க, வாசனை திரவியங்களை தெளித்தோம். போலீஸ் வராமல் இருந்திருந்தால், நாங்கள், சக்கரபாணியின் உடலை ஆற்றில் வீசியிருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X