கூடலுார்:முதுமலையில், பசுமைக்கு மாறிய வனத்தை நோக்கி, இடம்பெயர்ந்த வன விலங்குகள் திரும்ப வர துவங்கி உள்ளன.நீலகிரி மாவட்டம், முதுமலையில், கோடை வறட்சியியின் போது, வனப்பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு, பசுந்தாவரங்கள் காய்ந்து காணப்பட்டது. இனால், வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி இடம் பெயர்ந்து சென்றன.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது, பெய்து வரும் கோடை மழையினால், வனப்பகுதி பசுமைக்கு மாறி வருவதுடன், வறண்ட நீர் நிலைகளிலும் நீர்வரத்தும் துவங்கியுள்ளது.வறட்சியில் இடம் பெயர்ந்த, வனவிலங்குகள் தற்போது, முதுமலை நோக்கி திரும்பி வருகிறது. சாலையோர பசுமையில் மான்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதை பார்க்கும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'கோடை மழையினால் வனப்பகுதி பசுமைக்கு மாறியதை தொடர்ந்து, உணவு குடிநீருக்காக இடம்பெயர்ந்த வனவிலங்கு மீண்டும் இங்கு வரத் துவங்கியுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில், சாலையோரம்மேய்ச்சலில் ஈடுபடும் மான்களுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என, அறிவுறுத்தி உள்ளோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE