திருப்பூர்:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், தோட்டக்கலைத்துறை பூங்கா அமைக்க உத்தேச அறிக்கை தயாராகி வருகிறது.நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தில் மேலும், 24 இடங்களில், தோட்டக்கலை பூங்காக்கள் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் தோறும், தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கான முன்கள ஆய்வு துவங்கியுள்ளது.
நிலம் தேர்வான பகுதிகளில், முதல் கட்டமாக, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலம் இல்லாதபட்சத்தில், கோவில் நிலங்களில், அழகிய தோட்டக்கலை பூங்காவை உருவாக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், பிரமாண்டமான தோட்டக்கலை பூங்கா அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ளது. அதற்கான முன்மொழிவு பணிகள் துவங்கியுள்ளன.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக, 35 ஏக்கர் நிலம் உள்ளது. நகரை ஒட்டி அமைந்துள்ளதால், அப்பகுதியில், தோட்டக்கலை பூங்கா அமைக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை, தோட்டக்கலைத்துறையை ஒருங்கிணைத்து, அதற்கான முன்மொழிவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது,' என்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement