தமிழகம், புதுச்சேரியில்2 நாட்களுக்கு மழை

Added : மே 15, 2022
Advertisement
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகம், புதுச்சேரி மறறும் காரைக்கால் பகுதிகளில், அநேக இடங்களில் இன்றும் நாளையும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 17, 18ல், தமிழகம்,

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மறறும் காரைக்கால் பகுதிகளில், அநேக இடங்களில் இன்றும் நாளையும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 17, 18ல், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
இன்று லட்சத்தீவு, கேரளா, அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய, தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்.நாளை லட்சத்தீவு, கேரளா மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 கி.மீ., முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் வீசும். மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X