கோவை:''மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே எக்ஸ்பிரஸ் ரயிலை நிரந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் சீனிவாசன் தெரிவித்தார்.கோவை - பட்டேல் நகர் (டில்லி) இடையேயான பார்சல் சரக்கு ரயில் சேவை, துவக்க விழா வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று நடந்தது.சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:கோவை - பட்டேல் நகர் பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமைகளில், இயக்கப்படும். இதன் மூலம், தொழில் துறையினருக்கு பல்வேறு வசதிகளை தரும்.மிகவும் குறைந்த கட்டணத்தில் விரைந்து சரக்குகளை கொண்டு செல்ல இந்த ரயில் உதவும். தொழில் முனைவோர் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.பாலக்காடு - திருச்செந்துார் ரயிலை மேட்டுப்பாளையம் வரை இயக்குவது குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மக்களிடம் உள்ள வரவேற்பை பொருத்து மேட்டுப்பாளையம் வரை இயக்க கோரிக்கை விடுக்கப்படும்.மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது. தற்போது, 60 சதவீதம் வரை ரயில் முன்பதிவு நடக்கிறது. இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,இவ்வாறு, அவர் கூறினார்.சரக்கு ரயில் துவக்க விழாவில், கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ்குமார் மீனா, மண்டல இன்ஜினியர்(மேற்கு) சுப்ரமணியம், சேலம் கோட்ட ரயில்வே உதவி வணிக மேலாளர் பிள்ளைக்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE