கோவை:பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவின் போது பத்திரிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. தமிழக கவர்னர் ரவி பட்டம் வழங்கினார். விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் தகவல்கள் அடங்கிய பைல் வழங்கப்பட்டது. அதில், ஒரு கவரில், 500 ரூபாய் வைத்து கொடுக்கப்பட்டது. இதை பார்த்து பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் காளிராஜிடம் பணம் அடங்கிய கவரை திருப்பி அளித்தனர். அப்போது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.
மூவர் கமிட்டி
பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில்,'' பத்திரிக்கையாளர்களுக்கு கவரில் பணம் வைத்து கொடுத்தது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE