கோவை:பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை அளிக்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் வரும், 24ம் தேதி முதல் 26 வரை நடக்கிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளில் சேர வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.'கொரோனா' பாதிப்பு காரணமாக கடந்தாண்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வழிகாட்டி நிகழ்ச்சி இந்தாண்டு, கோவை அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும், 24 முதல், 26 வரை நடக்கிறது.
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
உயர்கல்வி நிபுணர்கள், மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள் நேரடியாக ஆலோசனை வழங்குகின்றனர். புதிய படிப்புகள், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள், 'நீட்' குறித்த பிரத்யேக விளக்கம், மருத்துவம், இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம் சார்ந்த படிப்புகள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்படும்.வேலை வாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள்; படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.உயர்கல்வி வகைகள், 'நீட்' தேர்வு, சி.ஏ., - ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., உட்பட, தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை அணுகும் முறை, வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கடன் குறித்து, அனுபவமிக்க பேராசிரியர்களும், துறை சார் நிபுணர்களும் விளக்கம் தர உள்ளனர்.
அப்ளிகேஷன் முதல்அட்மிஷன் வரை
ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி, சோசியல் மீடியா, டிஜிட்டல் மார்கெட்டிங், பிக்டேட்டா, ரோபோட்டிக்ஸ் போன்றவை குறித்த தகவல்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 100 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில், அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் உள்ள பாடங்கள், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் குறித்து, மாணவர்கள், பெற்றோருக்கு, கல்வி நிறுவன பிரதிநிதிகள் விளக்கம் அளிப்பர்.
இணையும் கரங்கள்
'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகிறது. முக்கிய பங்களிப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள். 'ஸ்பான்சர்'களாக, கே.எம்.சி.எச்., அண்டு டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், குமரகுரு லிபரல் கலை, அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்கள் ஆகியவை நிகழ்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
சரியாக சொன்னா பரிசு
காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடக்கும். மூன்று நாட்களும் இரு வேளைகளில் கருத்தரங்கம் நடத்தப்படும். அனுமதி இலவசம். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கருத்தரங்கில் கேள்விகள் கேட்கப்படும். சரியாக பதில் செல்பவர்களுக்கு, 'டேப் லெட்' மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE