திருப்பூர்:''இயற்கைக்கு நாம் சிறு துளி பங்களிப்பு செலுத்தினால், அது பல மடங்கு தானாக வளர்ந்து கொள்ளும்'' என, கோவை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் பேசினார்.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வெற்றி' அமைப்பின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, ஏழு ஆண்டுகளில், 13.10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு, 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், 'வனத்துக்குள் திருப்பூர்-8' திட்ட துவக்க விழா, உடுமலை அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது.வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் பேசுகையில், ''தொழில் துறையினர் மற்றும் 'தினமலர்' நாளிதழ், தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியால், திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. நடப்பட்ட மரங்கள் வளர்ந்தும், பல இடங்களில் வனமாகவும் மாறியுள்ளது''''தனியார் நிறுவனம் மூலம், ஆய்வு செய்ததில், 50 வகையான மரங்கள் நடப்பட்ட பகுதியில், 150 வகை மரங்கள் காணப்படுகின்றன. 79 வகையான பறவைகள் காணப்படுகின்றன. இதில், மூன்று வகை பறவைகள், அடர்ந்த வனங்களில் வசிப்பவை என அறிக்கை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.கோவை மண்டல வனப்பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம் பேசியதாவது:மரம் நடும் விழாவை, ஆண்டு முழுவதும் திருவிழாவாக நடத்தி வருகின்றனர்.
பசுமை பரப்பு அதிகரிக்கும் இத்திட்டத்தில், பறவைகள், பல்லுயிரினங்களும் இணைந்து, பல வகை மரங்களை கொண்டு வந்து சேர்க்கிறது. இயற்கையை பாதுகாப்பதே, நம் வாழ்கைக்கான ஆதாரம்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி பேசுகையில், ''திருப்பூரில் பறவைகள் சரணாயலம் அமைப்பது, பசுமை பரப்பு அதிகரிக்கும் பணியில் வெற்றி அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. இப்பணிகள் தொடர வேண்டும்,'' என்றார்.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், வடுகபாளையம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE