வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பட்டினப் பிரவேசம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு அதிரடி காரியத்தை செய்ததாக டில்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளாராம்.
![]()
|
தமிழகத்தில் மதம் சம்பந்தமாக நடைபெற்று வரும் பல பிரச்னைகளை, அந்த ரகசிய 'ரிப்போர்ட்'டில் அமித் ஷாவிற்கு தெரிவித்துள்ளாராம்.தன் அறிக்கையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றதை குறிப்பிட்டுள்ள கவர்னர், 'பல கோவில்களுக்கு சென்றுள்ளேன்; பல சமய தலைவர்களையும் சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து பல புகார்கள் எனக்கு வந்துள்ளன.
![]()
|
'தமிழக அரசு ஹிந்து மத தலைவர்களையும், அவர்களது சம்பிரதாயங்களையும் மதிப்பதில்லை. தேவையில்லாமல் அரசு தலையிடுகிறது என இந்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்' என சொல்லிஇருக்கிறாராம்.அதோடு, 'தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கட்டாய மத மாற்றம் நடைபெற்று வருகிறது.
ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. 'இது குறித்து தலைமைச் செயலரிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை' எனவும் கவர்னர், தன் அறிக்கையில் குறிப்பிட்டுஉள்ளாராம்.இது குறித்து, மத்திய அரசு விரைவில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement