திருப்பூர்:திருப்பூரில், முறைகேடாக தங்கி, சுற்றித்திரிந்த வங்கதேச வாலிபர் கைது செய்யப்பட்டு, போலி ஆதார் கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சவுடாம்பிகை நகரில் முறைகேடாக வங்கதேசத்தினர் சிலர் தங்கிருப்பது குறித்து மத்திய உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வீரபாண்டி போலீஸ் எஸ்.எஸ்.ஐ., அழகுராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து மேற்கொண்டு, அப்பகுதியில் சுற்றிய நபரை பிடித்து, அவரிடம் இருந்த ஆதார் கார்டை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், குஜராத் மாநில முகவரியில், அம்ரூல் சேக் என்ற பெயரில், இந்த நபரின் போட்டோ இருந்தது. இவை போலியானது என்பது போலீசாருக்கு தெரிந்தது.விசாரணையில், அந்நபர் வங்கதேசத்தை சேர்ந்த அலமின் மியலாம், 34 என்பது தெரிந்தது. ஒரு ஆண்டாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார், ஜே.எம்.,எண்: 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement