குன்னுார்:'' நீலகிரி உட்பட சுற்றுலா மையங்களில், 20 பேருக்கு மேல் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் லாலி அரசு மருத்துவமனையில் 80 லட்சம் ரூபாயில் அதிநவீன புற நோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டது. இதனை நேற்று சுகாதார துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:குன்னுார் லாலி அரசு மருத்துவமனை, 136 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. 'ரோட்டரி, மைக்ரோ லேண்ட்' உட்பட தனியார் பங்களிப்புடன், கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி டயாலிசஸ் சென்டர், லேப், வார்டுகள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தியது பெருமைக்குரிய விஷயம். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டுக்காக, 1,018 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், குன்னுார் மருத்துவமனைக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.நீலகிரியில் சுற்றுலா பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மாநிலத்தில், 11.07 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் தான் கோவிட், 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
உறவு முறை திருமணம் வேண்டாம்
பழங்குடியினருாக்கு 'சிக்கில் செல் அனீமியா' போன்ற மரபு சார்ந்த நோய்கள், வராமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதும் பல இடங்களில் உறவு முறைகளில் திருமணம் நடந்து வருகிறது. இது தவிர்க்க வேண்டும். இதன் வாயிலாக மரபியல் சார்ந்த நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் பாலுச்சாமி, அரசு மருத்துவமனைகள் இணை இயக்குனர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement