எக்குத்தப்பாய் உயரும் பருத்தி விலை: நுாற்பாலைகளில் ஷிப்ட் குறைப்பு | Dinamalar

எக்குத்தப்பாய் உயரும் பருத்தி விலை: நுாற்பாலைகளில் 'ஷிப்ட்' குறைப்பு

Added : மே 15, 2022 | கருத்துகள் (9) | |
கோவை:பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், நுால் விற்பனை மந்தமாகி வருவதாலும், நுாற்பாலைகள் 'ஷிப்ட்' குறைத்து வருகின்றன.தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் (சிஸ்பா) தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் பஞ்சு விலை உயர்ந்து கொண்டே போகிறது. 30 எம்.எம்., பஞ்சு, 365 கிலோ கொண்ட ஒரு கேண்டி விலை, கடந்த ஜன., சராசரியாக, 76 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது, ரூ.1.05 லட்சமாக

கோவை:பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், நுால் விற்பனை மந்தமாகி வருவதாலும், நுாற்பாலைகள் 'ஷிப்ட்' குறைத்து வருகின்றன.தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் (சிஸ்பா) தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் பஞ்சு விலை உயர்ந்து கொண்டே போகிறது. 30 எம்.எம்., பஞ்சு, 365 கிலோ கொண்ட ஒரு கேண்டி விலை, கடந்த ஜன., சராசரியாக, 76 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது, ரூ.1.05 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.25 முதல், 30 வரை நஷ்டம் ஏற்படுகிறது.இதனால், பல நுாற்பாலைகள் செயற்கை நுாலிழைக்கு மாறி விட்டன. சிறு மற்றும் நடுத்தர நுாற்பாலைகளில் நடைமுறை மூலதனம் அழிக்கப்பட்டு, அபாய நிலையில் இருக்கின்றன. சில நுாற்பாலைகள் 'ஷிப்டை' குறைத்திருக்கின்றன. இந்நிலைதொடர்ந்தால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதோடு, ஜவுளி தொழில்களும் முடங்கும் நிலை ஏற்படும்.

புள்ளி விபரம் இல்லை
நாட்டின் மொத்த பருத்தி விளைச்சலில், 50 சதவீதம் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழக நுாற்பாலைகள் கொள்முதல் செய்கின்றன.நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி விளைச்சலை துல்லியமாக கணக்கிடாமல் உள்ளது. மத்திய அரசிடமோ, தனியாரிடமோ புள்ளிவிபரங்கள் இல்லை; இதுவே தவறாக உள்ளது. எனவே, பருத்தி விளைச்சலை அதிகரிக்க, வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய வழிமுறை
பருத்தி விளைச்சல் விபரம்; யார் யாருக்கு விற்கப்படுகிறது; கையிருப்பு பஞ்சு போன்றவற்றை துல்லியமாக சேகரிக்க மத்திய - மாநில அரசுகள், வேளாண் துறைகள் இணைந்து புதிய வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்.மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பஞ்சு ஆலோசனை குழு, நம் நாட்டுக்கு தேவையான பஞ்சு போக மீதமுள்ளதை ஏற்றுமதி செய்யலாம் என கணக்கிடுகிறது.ஆனால், தேவையான வரத்து வருவதற்கு முன்பே ஏற்றுமதி செய்து விடுகிறார்கள். பருத்தி சீசன் முடிந்த பின், விளைச்சலை கணக்கிட்டு, தேவைக்குபோக மீதமுள்ள பஞ்சை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.

புதிய பருத்தி வாரியம்
பஞ்சு இறக்குமதி வரியை, செப்., வரை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். யூக வணிகத்தை தடை செய்ய வேண்டும். இந்திய பருத்தி கழகம் தரமான பஞ்சை கொள்முதல் செய்து, நுாற்பாலைகளுக்கு நேரடியாக வினியோகிக்க வேண்டும்.ஜவுளித்துறையை பாதுகாக்க, நமது நாட்டில் குறைந்தபட்ச பஞ்சு இருப்பை பராமரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டுக்கு தேவையான பருத்தி விளைச்சல் முறை, பருத்தி வினியோக முறை கண்டறிந்து, புதிதாக வாரியம் உருவாக்க வேண்டும்.

அதிக நிதி ஒதுக்க வேண்டும்
புதிய ரக பருத்தி விதைகளை மத்திய - மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். விதை மேம்பாடு மற்றும் பயிர் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.தமிழக நுாற்பாலைகளுக்கு தேவையான பருத்தி, தமிழகத்தில், 5 சதவீதமே உற்பத்தியாகிறது. பருத்தி சாகுபடிதைய அதிகரிக்க புதிய யுக்திகளை தமிழக வேளாண் துறை கையாள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X