ஞானவாபி மசூதியில் ஆய்வு பணி துவக்கம்

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
வாரணாசி :வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத் துக்குள், 'வீடியோ' பதிவுடன் கூடிய கள ஆய்வு பணி, நேற்று துவங்கியது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி
ஞானவாபி ,மசூதி , ஆய்வு பணி, துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாரணாசி :வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத் துக்குள், 'வீடியோ' பதிவுடன் கூடிய கள ஆய்வு பணி, நேற்று துவங்கியது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. மேலும், அறிக்கையை ௧௭ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச
நீதிமன்றம் மறுத்துவிட்டது.


latest tamil news




இந்நிலையில், மசூதியில் கள ஆய்வு பணி நேற்று துவங்கியது. ஐந்து பேர் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வை மனுதாரர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் பார்வையிட்டனர்.
ஆய்வு பணி நடப்பதையடுத்து, மசூதியிலிருந்து 1 கிலோ மீட்டர் துாரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆய்வு பணி இன்றும் நடக்கிறது. இதற்கிடையே, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
15-மே-202217:50:00 IST Report Abuse
vijay //மோடி அரசின் பொருளாதாரம் பிசுபிசுத்துவிட்டது...// தினமும் சோறு சாப்பிடுறீங்களா? இல்லை பிட்சை ..... சாப்பிடுறீங்களா?? உண்மை என்ன என்று உலகிற்கு தெரியும்
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
15-மே-202217:31:49 IST Report Abuse
தமிழன் பிஜேபி அரசுக்கு இதை விட்டால் வேறு என்ன தெரியும். வளர்ச்சி திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா படு பாதாளத்திற்கு போய்விட்டது
Rate this:
Cancel
yts -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202214:20:09 IST Report Abuse
yts ஏன் தமிழனுக்கு மூக்கு வேற்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X