நகை திருட்டு
கள்ளிக்குடி: வடக்கம்பட்டி ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்சீதாராமன். இவரது மனைவி செல்வராணி 60. நேற்றுமுன்தினம்இரவு வீட்டு போர்டிகோவில் துாங்கியபோது உள்ளே வந்த மர்மநபர் 4 பவுன் தங்க செயினை திருடிச் சென்றார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுமாப்பிள்ளைஇறப்பில் மர்மம்
திருமங்கலம்: குதிரைச்சாரிகுளம்நாகராஜ் மகன் சுகன் 29. இவருக்கும், திருமங்கலம் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர்முருகன் மகள் மனுஸ்ரிக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் சினிமா பார்த்துவிட்டு மாலை ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இருவரும் வீடு திரும்பினர். இரவு 8:00 மணிக்கு வீட்டில் சுகன் மயங்கி விழுந்து இறந்தார். மகனின் சாவில் மர்மம் இருப்பதாக நாகராஜன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை பறிப்பு
கொட்டாம்பட்டி: வி. புதுார் சங்கர் 34. நண்பர் ராஜேஷ் உடன் நேற்று முன்தினம் இரவு மணப்பச்சேரி கண்மாயில் மது அருந்திய போது அங்கு வந்த 4 பேர் ஒரு பவுன் செயின் மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர். இன்ஸ்பெக்டர் பத்மநாபன் விசாரிக்கிறார்.
கஞ்சா விற்றவர் கைது
சோழவந்தான்: காடுபட்டி எஸ்.ஐ., பால்ராஜ் மற்றும் போலீசார் குருவித்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ளமயானத்தில் கஞ்சா விற்ற அய்யப்பநாயக்கன்பட்டி பாஸ்கரன் மகன் சங்கரை 29, கைது செய்து ஒரு கிலோ 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இரும்பு திருடியவர் கைது
வாடிப்பட்டி: திருமங்கலம் பாண்டியன் நகர் ராமகிருஷ்ணன் 41, கொத்தனார். இவர் கீழமாத்துாரில் வீடுகட்டும் வேலை பார்க்கும் இடத்திலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய வடபழஞ்சி கண்ணனை 38, போலீசார் கைது செய்தனர்.
பாம்பு கடித்து பெண் பலி
சோழவந்தான்: தென்கரை புதுார் கண்ணன் மனைவி வனிதா 33. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மே 12 ஊத்துக்குளி பகுதி வாழை தோட்டத்தில் புல் அறுத்த போது விஷ பாம்பு கடித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE